Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Wednesday, July 14, 2010

பொயடிக் ஜஸ்டிஸ்

வெள்ளை சட்டை போட்டு ஆபிஸ் சென்றேன். வீடு திரும்பும் போது, பஸ்சிலிருந்து ஒருவன் பான்பராக் எச்சி துப்ப, தோளில் டிசைன் அமர்க்களம்! சட்டை X

என் மீது பான்பராக் வெற்றிலை சீவல் எச்சி துப்புறவாலை என்ன செய்யலாம்? நடு ரோட்டில் நிற்க வைத்து சவுதி அரேபியா மாதிரி கல்லால் அடிக்கணும்.

நண்பர் ஒருவருடன் இன்று ஹார்லி டேவிட்சன் பைக்கில் தாஜ் கிருஷ்ணா பாருக்கு சென்றேன். காக்டெயில் மட்டும் தான். கொஞ்சம் காலாட்டினேன். பசி.

ஐ.டி. மக்கள் இருக்கும் ஊரில் சாயந்திரம் ஆறு மணிக்கே பார் நிரம்பி வழிகிறது. 2 வருடங்களாக பிசினஸ் டல் என்றார் பார்மேன், கேரளம் சேர்ந்தவர்

Poetic Justice! //வீடு திரும்பும் போது, பஸ்சிலிருந்து ஒருவன் பான்பராக் எச்சி துப்ப// சம்பாரிததை குடிப்பதை கண்டிபப்து போன்று தோன்றியது.

நல்ல பசி. இன்னும் சப்பாத்தி வரவில்லை. சன்னா மசாலா தான் இருக்கும். ரூமில் மேட் ஏங்கில்ஸ் பாக்கட் ஓபன் பண்ணனும்.

Sunday, July 11, 2010

சர்வைலன்ஸ்

டிடெக்டிவ் பிசினஸ் லீகலா? ஆம் என்கிறார் முப்பது வருட லா எச்பீரியன்ஸ் உள்ள என் அப்பா. Surveillance data is admissible in any court.

How will you prove adultery for the sake of divorce with Surveillance? The court or govt. has to give specific permission, before or after!

இப்போது ஒளிபரப்பாகும் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி, அக்கிரமமான ப்ரொக்ரேம் என நினைக்கிறேன். சர்வைலன்ஸ் என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. அதை தெரியாமல் ஒரு ப்ரொக்ரேம்! :-(

இப்போது இன்டர்நெட் ஏக்ட் படி ஒரு இமெயில் மூலம் என்னை கிண்டல் செய்த ஆளின் முகவரி முதலியன பெற்றேன். Its my choice to file charges against him...

ஒரு பெயரில் ஒளிந்துகொண்டு மற்றவரை துன்புறுத்தும் ப்ளாகர்களின் கொட்டங்களை அடக்க ப்ளாகர் சம்யுதாயம் ஒன்று சேர்ந்து வர்க் பண்ணுங்க. #Survey

நீ முதலில் முகத்தை காட்டு, நான் அப்புறம் காட்டுறேன் என்பவருக்கு, கொல்லிமலை காட்டில் பாம்பு சிலைக்கு மிளகாய் அரைக்கவும். பில்லி சூன்யம். :-)

திருப்பூரில் ஒருவர் இருக்கார். விடியோவில் படம் பிடித்து ஆதாரம் கலக்ட் பண்ணுவார். லஞ்ச பேர்வழிகளை பிடித்து கொடுத்தார். Court is OK #Survey

Sure if there is a need like workplace. Its called IPC Bare act. http://www.countercurrents.org/karun020109.htm


தமிழக தேர்தல் ஒரு பார்வை

தமிழக தேர்தல் ஒரு பார்வை ...

கொஞ்சம் ஜோதிடம், கொஞ்சம் கெஸ்.

விஜயகாந்த் அம்மா பக்கம் சாய்ந்துவிட்டார். சரத் சாய்ந்தார் 30 கோடிக்கு ஒன்றும் ஆகலே. இப்போ 2 வோட் பேன்க். 28+15= 35% வெற்றி இரட்டை இலைக்கே

எனகென்னவோ விஜயகாந்த் கூட்டணி ஆட்சி அமைப்பார் என தோன்றுது இருவர் சமமாக வென்றாலும். நல்லது தான். அவர் ஜோசியர் வாழ்க. ஸ்ட்ராங்கான ராசி. ஆங்

சென்ற தேர்தலில் பெற்ற வோட்டுக்கள் படி 110 தொகுதிகளில் அ.தி.மு.க வும் + தே.மு.தி.கவும் வென்றிருக்கலாம். இந்த முறை தே.மு.தி.க 60 நிச்சயம்.

மகாராஷ்டிர பார்முலா இருந்தால் நல்லது. விஜயகாந்த் 30, ஜெ 30 மாதங்கள் ஆட்சி. ஆனால் இந்த மாடல் கர்நாடகாவில் கவிழ்ந்தது. பார்ப்போம்.

இலவசங்கள் இருந்தாலும் மதுரை மற்றும் கொங்கு மண்டலத்தில் தி.மு.க ஒன்றும் செய்ய முடியாது. ரியல் எஸ்டேட் டீல்ஸ் செய்து கோடிகளில் அள்ளினார்கள்

தமிழ்நாடு தொகுதி பங்கீடு இப்படி இருக்கும். அ.தி.மு.க 135 தே.மு.தி.க 63 வைக்கோ 27 கம்யு 9 ரிசல்ட் முறையே 52, 60, 5, ௨

***

அப்போ கூட்டணி அமைக்கும் போது, கூட்டணி ஆட்சிக்கும் ஓகே செய்துக்கொண்டு ( யார் அதிகம் பெறுகிறார்களோ அவர்களுக்கு தான் சி.எம் போஸ்ட் ) முயன்றால் வெற்றி நிச்சயம்.

தி.மு.கவின் திட்டங்கள் எவை எவை கிடப்பில் போடப்படும்? கலைஞர் காப்பீட்டு திட்டம் முதலில் அடிபடும்.

வாழ்க வளமுடன்.

Thursday, July 1, 2010

விசுவாசம்

இதை படியுங்கள்...

ஈழதமிழருக்கு எதிராக ஒரு கருத்து சொன்னால் 'சிங்கள' விசுவாசமா?

அப்போ இந்திய கவர்ன்மன்ட்டும் சிங்கள விசுவாசியா? ( உதவி, ராணுவ தளவாடம், ரயில்வே கோச்சுகள், ஸ்பைசஸ் )

ஸ்பைஸ் ஜெட் ஏர்வேய்ஸ் வாங்கி கொலோம்போவிற்கு விமானம் விடும் கருணாநிதி குடும்பமும் சிங்கள விசுவாசியா?

நடு நிலையோடு இருங்கள். உங்கள் பிறந்த நாட்டில் உழைத்து வாழ்ந்து - அங்கு உருப்படும் வேலை பாருங்கள்.

நான் யாருக்கும் சப்போர்ட் இல்லை.

என் மீது குற்றம் சுமத்தினால்... என் அண்ணன் பிரபாகரன் பார்த்துக்கொள்வார்!

Monday, March 29, 2010

வெளிநாட்டு மோகம் பாவம் இந்தியர்கள்

வெளிநாட்டு மோகம் பற்றி வாஞ்ஜூர் அவர்கள் பதிவில் உள்ள சமரச இதழின் கட்டுரை படித்தேன்.

அட்டகாசம்!

வந்தவரை லாபம் என்று இருக்கும் நம் மக்களால் தான் இது நடக்கிறது. எங்களிடம் ஒன்று இல்லை, அங்கேயாவது கிடைக்கட்டும் என்று ஒரு நல்லா ஆசை தான் எல்லோரும் ஓடுகிறார்கள். அதில் உண்மை இருக்கு. பெருமைக்காக செல்வது என்பது அநியாயம்.

என்ன குறைவில்லை நம் நாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?
ஒற்றுமையாக இருக்க பாடுபட்டால்
அனைத்தும் கிடைத்திடும் இங்கே

நான் அமெரிக்கா செல்ல விசா வைத்திருந்தும் உலக வர்த்தக மைய்ய கட்டிடங்கள் முஸ்லிம் தீவிரவாதிகளால் ( பின் லாடன் ஏவுதலின் பேரில் ) நியூ யார்க் நகரில் இடிக்க பட்ட போது, மன மாற்றம் ஏற்பட்டு செல்லவில்லை. நம் நாட்டின் மீது காதல் ஏறியது.

இந்தியாவிலேயே சொந்தமாக வேலை முயற்சி செய்து நலமாக உள்ளேன்.

என்ன நல்ல சாலைகள், குப்பைகள் இல்லாத தெருக்கள், நல்ல வாழ்க்கை முறை, லஞ்சம் குறைவான அரசியல், மத ஒற்றுமை என இருந்தால் நாம் வல்லரசு தான்.

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படும் நவீனங்களை வாங்க தான் இந்தியாவில் போட்டி. செய்பவர்கள் நம்மவர்கள் தான். என்ன கொடுமை இது அய்யா?

இன்றும் வானிலை அறிக்கை சரியாக வர வைக்க கம்ப்யுடர் கொடுக்காத அமெரிக்காவெல்லாம் ஒரு நல்ல நாடா? உளவுக்கும், ஆயுதம் தயாரிக்கவும் இந்தியாவில் பயன் படுத்துவோம் என்று நம்புவது அவர்களின் முட்டாள்தனம்.