Monday, March 29, 2010

வெளிநாட்டு மோகம் பாவம் இந்தியர்கள்

வெளிநாட்டு மோகம் பற்றி வாஞ்ஜூர் அவர்கள் பதிவில் உள்ள சமரச இதழின் கட்டுரை படித்தேன்.

அட்டகாசம்!

வந்தவரை லாபம் என்று இருக்கும் நம் மக்களால் தான் இது நடக்கிறது. எங்களிடம் ஒன்று இல்லை, அங்கேயாவது கிடைக்கட்டும் என்று ஒரு நல்லா ஆசை தான் எல்லோரும் ஓடுகிறார்கள். அதில் உண்மை இருக்கு. பெருமைக்காக செல்வது என்பது அநியாயம்.

என்ன குறைவில்லை நம் நாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?
ஒற்றுமையாக இருக்க பாடுபட்டால்
அனைத்தும் கிடைத்திடும் இங்கே

நான் அமெரிக்கா செல்ல விசா வைத்திருந்தும் உலக வர்த்தக மைய்ய கட்டிடங்கள் முஸ்லிம் தீவிரவாதிகளால் ( பின் லாடன் ஏவுதலின் பேரில் ) நியூ யார்க் நகரில் இடிக்க பட்ட போது, மன மாற்றம் ஏற்பட்டு செல்லவில்லை. நம் நாட்டின் மீது காதல் ஏறியது.

இந்தியாவிலேயே சொந்தமாக வேலை முயற்சி செய்து நலமாக உள்ளேன்.

என்ன நல்ல சாலைகள், குப்பைகள் இல்லாத தெருக்கள், நல்ல வாழ்க்கை முறை, லஞ்சம் குறைவான அரசியல், மத ஒற்றுமை என இருந்தால் நாம் வல்லரசு தான்.

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படும் நவீனங்களை வாங்க தான் இந்தியாவில் போட்டி. செய்பவர்கள் நம்மவர்கள் தான். என்ன கொடுமை இது அய்யா?

இன்றும் வானிலை அறிக்கை சரியாக வர வைக்க கம்ப்யுடர் கொடுக்காத அமெரிக்காவெல்லாம் ஒரு நல்ல நாடா? உளவுக்கும், ஆயுதம் தயாரிக்கவும் இந்தியாவில் பயன் படுத்துவோம் என்று நம்புவது அவர்களின் முட்டாள்தனம்.

No comments:

Post a Comment