Monday, June 7, 2010

தாடி தேவைதான்

டி. ராஜேந்தர் ஏன் தாடி வைத்திருந்தார் என்று யோசித்து பார்த்தேன். காதல் தோல்வி இல்லை ஒரு நல்ல விசயமா? ஆம் என்று தான் தோண்டுகிறது...

சில மாதங்களாக வேலை இல்ல்லாமல் இருக்கிறேன். சாப்ட்வேரில் என்னங்க வேலை செய்யறது... இருந்தாலும் சம்பளம் வரதில்லை. பேங்கில் இருந்து எடுத்து வாழ்க்கை நடத்தும் ஆள்.

இரவு இரண்டு மணி வரை எதாவது படித்துக்கொண்டு - புதியதாக வேலை கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

காலையில் முதலில் எழுந்ததும் - முகசவரம் செய்வேன்.

இப்போதெல்லாம் இல்லை.

கன்னத்தில் எரிசல் இல்லை. ஒரு மாத தாடி அழகாக தான் இருக்கு. மீசை மட்டும் கொஞ்சம் ட்ரிம் செய்தேன்.

அட இதுவே ஒரு ஸ்டையில் தான்... பாட்சா படத்தில் ரஜினி வைத்த தாடி விட, பெரிய தாடி வைக்கணும்... ரங்கராஜன் பாட்சா... ரங்கா பாட்சா...

ரொம்ப கூல். கடைக்கு சென்றால், என்ன பாய் என்ன வேண்டும் என்கிறார்கள் இங்கு.

வெயில் காலத்தில் கூட நன்றாக இருக்கு.

:-)

No comments:

Post a Comment